விஜயுடன் கூட்டணி அமையுங்கள்: ராமதாசை வலியுறுத்தும் நிர்வாகிகள்

சென்னை: “த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாசை, அவரது ஆதரவு நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகளுடன், ராமதாஸ் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

பல மணி நேரம் நடந்த கூட்டத்தில், ‘தி.மு.க., – அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகி விட்டது. எனவே, அடுத்தகட்ட முயற்சியாக, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்’ என ராமதாசை பா.ம.க., நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அனைவரின் கருத்துகளையும் கேட்ட ராமதாஸ், ‘கட்சியின் எதிர்காலம் கருதி, கூட்டணி குறித்து சிறந்த முடிவை எடுப்பேன்’ என கட்சியினரிடம் தெரிவித்து உள்ளார்.

Source link