நடிகர் தனுஷின் வருகை: அரசியலில் மாற்றங்கள் ஏற்படுமா ? என்ற கேள்விக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜயின் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து மாற்றத்தை உருவாக்கியுள்ளது.இந்த சூழலில் விஜய்க்கு போட்டியா இருக்கு நடிகர் தனுஷ் களமிறங்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக ஒருங்கிணைத்து பல்வேறு சமூக நல்ல பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.தற்போது அரசியல் களத்தில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் தனுஷின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.குறிப்பாக தற்பொழுது தனுஷ் ரசிகர் மன்றத்தின் சமூக நலப் பணிகளை குறிப்பதற்காக பயன்படுத்தி வரும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடி, அரசியல் கட்சியின் கொடியைப் போன்று இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வந்தது.இருப்பினும் இந்த கொடி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருப்பதாக ரசிகர் மன்ற தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?
மேலும் தனுஷின் பெயரில் தமிழர்கள் எழுச்சி கழகம் என்று புதிய அரசியல் கட்சிப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகின்றன. கட்சியின் பெயரை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக தான் தனுஷ் சமீபத்தில் டெல்லி சென்றதாகவும் தகவல் பரவியது. ஆனால் இது குறித்து தனுஷ் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இத்தகைய சூழ்நிலையில் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து டெல்லியில் நடிகர் தனுஷ் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் vs தனுஷ் அரசியல் போட்டி
இந்த சூழலில் நடிகர் தனுஷின் வருகை விஜய்க்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வி கடந்த சில நாட்களாக அனைத்து கட்சி பிரமுகர்களின் செய்தியாளர்கள் சந்திப்பிலும் முக்கிய கேள்வியாக முன் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தவெக அமைச்சர்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என விளக்கம் அளித்து வருகின்றன. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனிடமும், நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் தான் தற்போது ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,நடிகர் தனுஷின் வருகை ரொம்ப ப்ரீ மெச்சூர் கொஸ்டின். அவர் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை அவர் முறையாக அறிவிக்கவே இல்லை. சோஷியல் மீடியாவில் பரப்பப்படும் வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றால். தமிழக சட்டசபை தேர்தலை விட இடைத்தேர்தலில் தவெக.,வின் ஓட்டு சதவீதம் குறைந்து விட்டதே என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், நான் ஒன்றும் அனலிஸ்ட் கிடையாது என பதிலளிக்காமல் நழுவினார்.
தனுஷ் பற்றிய திருமாவின் கருத்து சரியா?
தவெக அமைச்சர் மரியவில்சன் கூறுகையில், தனுஷ் யாருக்கும் போட்டியே கிடையாது.மறுபுறம்,திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியோ,நடிகர்கள் அனைவரும் அரசியலுக்கு வரட்டும் யாரு சரியான தலைவர் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கூறியிருந்தார். அந்த வகையில், தமிழக அரசியல் களத்தில் மூத்த அனுபவம் வாய்ந்த தலைவர்களும் ஒருவர் திருமாவளவன்.தமிழக அரசியலை காட்டிலும், தேசிய அரசியலிலும் கைதேர்ந்த இவர், நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் மிகவும் முதிர்ச்சியற்றவை என்று கூறியுள்ளார். காரணம் தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை அரசியலுக்கு வருவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவும் தகவல்கள் அனைத்தும் வெறும் யூகங்களே தவிர, அதற்கு எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லை. அரசியல் கட்சி தொடங்குவது என்பது சாதாரண விஷயமல்ல. தனுஷ் தரப்பிலிருந்து இது தொடர்பாகப் பேட்டிகளோ அல்லது அறிக்கைகளோ வெளிவந்தால் மட்டுமே அது அதிகாரப்பூர்வமான செய்தியாகும். ஆனால், இது போன்ற வதந்திகளைப் பற்றி தனுஷ் இதுவரை எங்குமே வாய் திறக்கவில்லை என்பது தான் எதார்த்தம். தமிழக அரசியல் களத்தில் யூகத்திற்கு மட்டும் தான் அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தனுஷைப் பொறுத்தவரை அவர் தனது திரையுலகப் பணிகளிலேயே முழு கவனம் செலுத்தி வருவதால், அரசியல் வருகை குறித்த செய்திகள் யாவும் வதந்திகளாகவே வலம் வருகின்றன. அப்படி பார்த்தால் திருமாவளவன் கூறி பதில் சரியானதே. அவரது இந்த பதில், அவர் கை தேர்ந்த, அனுபவம்மிக்க அரசியல் தலைவர் என்பதை எடுத்துக் காட்டி உள்ளது.
Source link
