தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்துள்ளது முதல்வராக விஜய் பொறுப்பேற்றுதலில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் பேசி இருந்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
விஜய்யின் எலும்புகளை உடைப்போம்
இந்த நிலையில் மீண்டும் தற்பொழுது விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் முதல்வர் விஜயை மிரட்டும் தொனியில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில்பட்டியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,இனி வரும் தேர்தல்களில் தவெக 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் போகும். பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தபோதும், அப்போது அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் நாகரிகத்துடனும் பேசி வந்தனர்.
சிக்கும் மாஜிக்கள்! திமுக தலைமைக்கு நெருக்கடி?
ஆனால், தற்போது சட்டப்பேரவையில் “உங்க அப்பாவை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று முதலமைச்சர் விஜய் பேசியது ஏற்க முடியாத ஒன்று. இதுபோன்ற பேச்சை இதுவரை நான் எந்த அரசியல் மேடையிலும் கேட்டதில்லை. எங்களை என்ன கோமாளிகளாக நினைக்கிறாரா? இதற்கு சட்டப்பேரவையிலேயே பதில் சொல்வோம் .சட்டமன்றத்தில் கதவுகளை மூடினால் விஜய்யின் எலும்புகளை உடைத்து அனுப்புவோம்.
மிரட்டல் விடுத்த திமுக MLA மார்க்கண்டேயன்
சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று மிரட்டும் தொணியில் பேசி இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்தனர்.
புகாரியின் அடிப்படையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டே என்னை விசாரிக்க விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை காவல்துறையினர் வந்தனர்.அப்போது நான் எம்எல்ஏ.. சபாநாயகர் அனுமதி வேண்டும்.என்னை சபாநாயகர் பெட்டிஷன் வேண்டும். அதனை வாங்கிட்டு வாங்க என்று காவல்துறையினரிடம் கூறனார்.
கனிமொழி மார்க்கண்டேயன் கைது கண்டனம்
பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது மிரட்டல் அமைதிக்கு குந்தகம் விளைத்தல் மற்றும் வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். மேலும் அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது அராஜகமான முறையில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை கைது செய்திருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கி பார்க்கும் தாவிக்க அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் உடனடியாக மார்க்கண்டே எண் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
