ஸ்வாதி ஹீரோ: அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்த தேவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்வாதி. அது தான் அவர் நடித்த முதல் படம். வனிதா விஜயகுமாருக்கு மட்டும் அல்ல ஸ்வாதிக்கும் முதல் பட ஹீரோ விஜய்ணா தான்.
விஜய் தமிழக முதல்வரான பிறகு நடிகர்கள், நடிகைகள் பலர் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். விஜய் பட ஹீரோயின்களான சிம்ரன், சினேகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முதல்வரை சந்தித்தார்கள். இந்நிலையில் நீங்கள் எப்பொழுது முதல்வரை சந்தீப்பீர்கள் என ரசிகர்கள் கேட்பதாக கூறியிருக்கிறார் ஸ்வாதி.
வாழ்த்துக்கள் முதல்வரே: தான் விஜய் உடன் சேர்ந்து நடித்தபோது எடுத்த புகைப்படங்களை வீடியோவாக்கி அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஸ்வாதி கூறியிருப்பதாவது, என் பழைய ஆல்பத்தை எடுத்துப் பார்த்தபோது அதில் இந்த அழகான நினைவுகள் இருந்தது. என் முதல் ஹீரோ இளைய தளபதி விஜய். நடிகராக இருந்து மதிப்பிற்குரிய முதல்வராகியிருக்கும் உங்களின் பயணத்தை பார்க்க இன்ஸ்பையரிங்காக இருக்கிறது. கடின உழைப்பால் வெற்றி கிடைத்திருக்கிறது. எத்தனை சவால்கள் வந்தபோதிலும் நம்பிக்கையை கைவிடாமல் சாதனை படைத்திருக்கிறீர்கள்.
சினிமா மற்றும் பொது சேவையில் சாதிப்பது சாதாரண விஷயம் இல்லை. ரீல் ஹீரோவாக இருந்து ரியல் வாழ்க்கையில் தலைவராகி ஒரு முன்னதாரணமாக இருக்கிறீர்கள். இந்த சாதனைக்காக வாழ்த்துக்கள் சி.எம்.சார். இந்த புது சாப்டரில் வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களை சந்தித்து நேரில் வாழ்த்த காத்துக் கொண்டிருக்கிறேன். நான் எப்பொழுது உங்களை சந்திப்பேன் என என் தோழிகள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் கேட்கிறார்கள். அந்த நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன் என்றார்.
ஸ்வாதியின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்களோ, விஜய்ணா நம்ம ஸ்வாதிக்கு ஒரு அபாயின்மென்ட் கொடுங்க என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று விரைவில் புகைப்படங்களை வெளியிடுவார் ஸ்வாதி என்று நம்பப்படுகிறது.
பள்ளி மாணவி ஹீரோயின்: தேவா படத்தில் வேறு ஒருவரை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார் எஸ்.ஏ. சந்திரசேகர். ஆனால் அவர் நடிக்காமல் போகவே அந்த நேரம் ஸ்வாதியின் மாடலிங் புகைப்படங்களை பார்த்துவிட்டு அவருக்கு போன் போட்டால் அம்மாவோ, அதெல்லாம் முடியாது என்று கூறியிருக்கிறார்.
ஸ்கூல் லீவு நாட்களில் வீட்டில் இருப்பதற்கு பதில் போய் படத்தில் நடிக்கட்டும். முதலில் ஆடிஷனில் தேர்வு செய்யப்படணும். அதுவே நடக்காது என்று சொல்லி சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அப்பா. ஆனால் ஸ்வாதியை பிடித்துப் போய் ஹீரோயினாக்கிவிட்டார் எஸ்.ஏ. சந்திரசேகர். படங்களில் நடிப்பதை நிறுத்திய ஸ்வாதி தற்போது சீரியலில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
ஜனநாயகன் ஷோ: விஜய்ணாவோ கெரியரின் உச்சத்தில் இருந்த போதிலும் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார்.இனி நமக்கு முழு நேரம் அரசியல் தான் என முடிவு செய்யும் முன்பு அவர் நடித்த ஜனநாயகன் கடந்த 23ம் தேதி ரிலீஸாகி நான்கு நாட்களில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. சென்சார் போர்டு அதற்கு ஏ சான்று கொடுத்ததால் தியேட்டரில் குட்டீஸ்களுக்கு அனுமதி இல்லை. அப்படி இருந்தும் தியேட்டருக்கு பிள்ளைகளுடன் வந்த பெற்றோரை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சென்னையில் இருக்கும் தியேட்டர் ஒன்றுக்கு பிள்ளைகளுடன் வந்த பெற்றோர் கிளம்ப மறுக்கவே ஜனநாயகன் படத்தை திரையிடுவதை ஒரு மணிநேரம் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மேலும் அமைச்சர் ராஜீவ் தன் குழந்தைகள் இருவருடன் ஜனநாயகன் படம் பார்த்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது.
Source link
