விஜய் பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்த மாணவர்; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் சென்ற தவெக தலைவர் விஜய்யின் காரை பின் தொடர்ந்த போது விபத்தில் சிக்கிய 2 இளைஞர்களில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நபரும் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இம்மாதம் 4 ம் தேதிதவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் ,சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் கூட்டம் நடந்த பகுதிக்கு சென்றார். அப்போது, அவரது வாகனத்தின் முன்பும், பின்பும் ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து என்றனர். இதில், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடி வந்தபோது, திருச்சி கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த  விக்னேஷ், அவரது நண்பர் ஷாருண் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் சென்டர் மீடியனில் மோதியது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். பயம் அடைந்த இருவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி ஷாருண் உயிரிழந்தார். தற்போது  தீவிர சிகிச்சையில் இருந்த விக்னேஷும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Source link