“விஜய் மனதில் பாஜக; அதனால்தான் எங்கள் வேட்பாளர் பெயரை கூறினார்”

புதுச்சேரி: விஜய் மனதில் பாஜக உள்ளதால்தான் புதுச்சேரியில் அவரது வேட்பாளருக்கு பதில் பாஜக வேட்பாளர் பெயரை கூறினார். ராகுல் ஒருகாலத்திலும் பிரதமராக முடியாது என பாஜக துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு புதுவையில் தொண்டமாநத்தம் முதல் பத்துக்கண்ணு சந்திப்பு வரை ரோடு ஷோ நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடக்கிறது. 8,9-ம் வகுப்பு குழந்தைகளிடம் சாராயம், போதைப் பொருட்கள் கிடைக்கிறது. ஆனால் புதுவையில் முன்னேற்றமான ஆட்சி நடக்கிறது. புதுவையில் ரெஸ்டோபார்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்பறைகளில் வந்து தகராறில் ஈடுபடுகின்றனர்.

Source link