டி.ஸ்ரீகாயத்ரி, 20 கல்லுாரி மாணவி, கோவை
மு ன்னாடி, அங்கொன்றும் இங்கொன்றுமா இருந்த பெண்களுக்கு எதிரான கொடுமைங்க, இப்போ தினமும் கேக்குற செய்தியா மாறிடுச்சு. எங்க வீட்டு பெரியவங்க எல்லாம் இன்னைக்கும் ஜெயலலிதா அம்மா ஆட்சியை பத்தி தான் பேசுறாங்க. அப்போ இருந்த அந்த தைரியமும் பாதுகாப்பும் இப்போ இல்லைங்கிறது தான் கசப்பான உண்மை.
நீட் தேர்வை ரத்து செய்யவே முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதை வச்சு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாத்தி ஓட்டு கேப்பாங்கன்னு தெரியல. அதே மாதிரி தான், அனைத்து மகளிருக்கும், 1,000 ரூபாய் தருவோம்னு சொன்னாங்க. அப்புறம் பாத்தா தகுதி உள்ளவங்களுக்குதான்னு மாத்திட்டாங்க.
என் ஆதரவு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தான். பெண்களுக்கு எதிரா நடக்குற குற்றங்களை விசாரிக்க, ‘அஞ்சலை அம்மாள் திட்டம்’னு தனிப்பிரிவு கொண்டு வர்றது ரொம்ப வரவேற்க வேண்டிய விஷயம்.
விஜய் தலைமையில ஆட்சி அமைஞ்சா, அக்கா – தங்கச்சிங்க எல்லாரும் நிம்மதியா, பாதுகாப்பா நடமாடலாம்னு நம்புறேன்.
