விஜய் வருகையால் இளைஞர்களுக்கு அரசியலில் ஆர்வம் அதிகரித்துள்ளது: பொடி வைத்து பேசும் மாணிக்கம் தாகூர்

விருதுநகர்:”த.வெ.க., தலைவர் விஜய் வருகையால், அரசியலில் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது,” என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.

விருதுநகரில் அவர் அளித்த பேட்டி:

தி.மு.க., – காங்., கூட்டணி 20 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கிறது. எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க., புதிதாக இணைந்துள்ளது. பொது நன்மைக்காக, லோக்சபா தேர்தலில் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு, தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகருக்காக காங்., நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர்.

காங்கிரஸ் குறித்து த.வெ.க., தலைவர் விஜய் பேசியது முற்றிலும் தவறான கருத்து. குமரி முதல் காஷ்மீர் வரை, காங்., கொள்கைகளை எடுத்து சொன்னவர் எம்.பி., ராகுல். 17 வயதுடையவர்கள் அரசியலுக்கு வருவது, இதற்கு முன் அரிதாகவே நடந்தது. தற்போது, விஜயின் வருகையால் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதை மறுக்க முடியாது. இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவருவது ஜனநாயகத்திற்கு நல்லது.

மதுரை, துாத்துக்குடி ரயில்வே திட்டங்களை செயல்படுத்த விரும்பாத மத்திய பா.ஜ., அரசு, நிலங்களை கையகப்படுத்தவில்லை என மாநில அரசின் மீது பழிபோடுகிறர்து. பா.ஜ., அரசு, லோக்சபா தொகுதி மறுவரையறையை நடத்தினால், தென் மாநிலங்களில் 66 எம்.பி.க்கள் அதிகரித்தால் வட மாநிலங்களில் 200 எம்.பி.,க்கள் அதிகரிப்பர்.

இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.

Source link