விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஸ்கைரூட் குழுவினருக் செல்போனில் வாழ்த்து 

தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம் 1 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்கைரூட் குழுவினருக்கு பிரதமர் செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து உற்சாக மூட்டினார்.

கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்தபோது மாணவர் உயிரிழப்பு 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மதரஸாவில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது, தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 12பேர் காயமடைந்துள்ளனர். மதரஸா வளாகத்திற்குள் விடுதியில் தங்கியிருந்த 13 மாணவர்கள் கொண்ட குழுவினர், பயன்பாட்டில் இல்லாத கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, ஏணியில் இருந்து தவறி கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்துள்ளனர்.

Source link