வினாத்தாள் கசிவை தடுக்க புதிய மசோதா அறிமுகம்

வரும் திங்கள்கிழமை மக்களவையில் அறிமுகம் 

வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான கடுமையான திருத்தங்களை வரும் திங்கள்கிழமை மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும், 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவினரை பொறுத்தவரை பதவியை விட நாடே முக்கியம் 

பாஜகவினரை பொறுத்தவரை எந்தவொரு பதவியையும் விட நாடும், நமது இளைஞர்களும், மாணவர்களுமே மிக முக்கியமானவர்கள் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது இந்த உன்னதக் கொள்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டிஉயுள்ளார்.

பிரகலாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு 

பிரதமர் தன் மீது நம்பிக்கை வைத்து, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்துள்ளதாக, கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், இந்தத் துறையில் பணியாற்றவுள்ளதாக பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Source link