வியட்நாம்: சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்து – 48 பேர் மீட்பு, 14 பேர் மாயம்

ஹனொய்,

வியட்நாமை சேர்ந்த சரக்கு கப்பல் கடந்த 24ம் தேதி தென் சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பலில் 62 மாலுமிகள் பயணித்தனர்.

கப்பல் கடலில் மூழ்கி விபத்து

இந்நிலையில், நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் திடீரென மூழ்கத்தொடங்கியது. இதையடுத்து, கப்பலில் இருந்த மாலுமிகள் உதவிகோரி அவசர அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, வியட்நாம், சீனா, பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் முதற்கட்டமாக 44 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். பின்னர், நடைபெற்ற தொடர் மீட்புப்பணியில் மேலும் 4 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதன் மூலம் உயிருடன் மீட்கப்பட்ட மாலுமிகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்தது

14 மாலுமிகள் மாயம்

ஆனால், சரக்கு கப்பல் மூழ்கி 5 நாட்கள் ஆகும் நிலையில் கடலில் மூழ்கி மாயமான எஞ்சிய 14 மாலுமிகளின் நிலை என்ன? என்ற விவரம் வெளியாகவில்லை. மாயமான 14 மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Source link