உங்களுக்கு, வாக்கியப்படி மார்ச்-6 அன்று நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியில் ராசிக்கு 5-ல் அமர்ந்து பலன் தரப் போகிறார் சனி பகவான். அதனால் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன… ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த பலன்கள் உங்களுக்காக!

இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இதில் பிறந்த அன்பர்களுக்கு, எண்ணம், செயலில் ஸ்திரத்தன்மை பளிச்சிடும். எந்த விஷயத்திலும் வெற்றியை இழக்க விரும்பமாட்டார்கள். இடையூறுகளைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து செயல்பட்டு வெற்றியைச் சந்திப்பர். பிறர் மனதில் இருக்கும் எண்ணங்களை நொடியில் கண்டுபிடிக்கும் திறன் இருக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:
1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை 5-ம் வீட்டில் அமர்கிறார் சனி பகவான். நல்லதே நடக்கும். பணப்பை நிரம்பும். அடகில் வைத்திருந்த பழைய நகைகளை மீட்பீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும்.
2. குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் நீண்டநாள் விருப்பங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அவர்களிடம் அதிகம் கண்டிப்பு வேண்டாம்.
3. பூர்விகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வீடு கட்டும் பணி பூர்த்தி ஆகும். புதுவீட்டில் குடிபுகுவீர்கள். எனினும், சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் அலைக்கழிக்கும். அலைச்சலும் மனக்கசப்புகளும் வந்துபோகும்.
4. எனினும் அம்மாவுக்குச் சிறு சிறு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அவரின் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். காரணம், 2.04.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டாதியில் செல்கிறார் சனி. வீண் விரயங்களும் ஏற்படலாம்.

5. சனி பகவான் 14.4.2027 முதல் 24.4.2028 வரை, ரேவதியில் செல்வ தால் திடீர் பணவரவு உண்டு. சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு.
6. சனி 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை வக்ரத்தில் செல்வதால், வீடு மாறுவீர்கள். வெளிநாட்டுப் பயணம் அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
7. இந்தப் பெயர்ச்சிக்காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 2, 7 மற்றும் 11-ம் வீடுகளைப் பார்க்கிறார். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். சிலருக்குக் கண் எரிச்சல், பார்வைப் பிரச்னைகள் வந்து போகும்.
8. வீட்டில் மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். சிறு பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையிட்டை அனுமதிக்காதீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அதிக உரிமை எடுத்துக்கொள்ளவேண்டாம். திடீர் பணவரவு, மனச்சோர்வைப் போக்கும்.
9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அலுவலகத்தில் வேலைச் சுமை விலகும். பதவி உயரும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டைச் சிறப்புடன் செய்து வருவீர்கள்.
10. வியாபாரத்தில், புதிய கொள்முதலுக்கு வழிவகை பிறக்கும். விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். ஏஜென்ஸி, புரோக்கரேஜ், கல்வி நிறுவனங்கள், ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் நல்ல லாபம் உண்டு.
11. உத்தியோகத்தில், பெரிய பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப் படும். விரும்பிய ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும். கணினித் துறை அன்பர்களுக்கு, வெளிநாட்டு வாய்ப்பு கதவைத் தட்டும்.
