சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பல்கலைக்கழகம் கல்வி உதவித்தொகைகளை வழங்கும் என்று ‘வந்தாரா’ தெரிவித்தது. இது ‘Vantara University Founding Fellows’ மற்றும் ‘Every Life Matters’ ஆகிய உதவித்தொகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சூழல் மண்டல மேலாண்மை ஆகிய துறைகளில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றிற்கான ஒரு நீண்டகால தளமாகவே இப்பல்கலைக்கழகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ‘வந்தாரா’ தெரிவித்தது.
சமீபத்தில் தனது முதல் ஆண்டை நிறைவு செய்துள்ள இந்த வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம், 3,500 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளதோடு, சுமார் 1,50,000 விலங்குகளுக்குப் புகலிடமாகவும் திகழ்கிறது.
ஆனந்த் அம்பானியின் ‘வந்தாரா’ முயற்சியின் மூலம் இந்த பல்கலைக்கழகம், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கவனிப்பில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
