விலங்குகள் இறக்குமதிக்கு 30% வரி அமலானது

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலங்குகள், பறவைகளுக்கு 30 சதவீத அடிப்படை சுங்கவரி விதிக்கப்படும் என்று 2026 – 27 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, தனியார் விலங்குகள் சரணாலயம் உள்ளிட்டவை, இறக்குமதி செய்யும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இப்போது, அது நீக்கப்பட்டுள்ளது. இதனால், சரணாலயங்கள் மட்டுமின்றி, வனவிலங்கு மீட்பு மையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு செலவு கணிசமாக உயரும்.

நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வரி விலக்கு ரத்து காரணமாக, இறக்குமதி செய்யப்படும் விலங்கு அல்லது பறவையின் விலையில், 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

நீண்ட காலமாக அமலில் இருந்த 30 சதவீத அடிப்படை இறக்குமதி வரியில் இருந்து அளிக்கப்பட்டு வந்த விலக்கு, திடீரென நீக்கப்பட்டதற்கான காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை. இது, நம் நாட்டின் தனியார் விலங்குகள் சரணாலயங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Source link