புயுப்லா: மெக்சிகோவில் உலக கோப்பை ‘ஸ்டேஜ் 1’ வில்வித்தை தொடர் நடக்கிறது. காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரகதி, பிரவின் ஓஜாஸ் ஜோடி, டென்மார்க்கை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி, 149-157 என தோற்றது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
ரிகர்வ் தனிநபர் பிரிவில் போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் அனுபவ வீரர் அடானு தாஸ், இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் பாப்லோ அச்சாவை சந்தித்தார். இதில் அடானு தாஸ் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்திய வீரர் திராஜ் பொம்மதேவரா, சக வீரர் யாஷ்தீப் சஞ்சயை சந்தித்தார். இதில் திராஜ், 6-2 என வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
பெண்கள் தனிநபர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அன்கிதா, அமெரிக்காவின் ஒலிவியாவை 7-2 என வென்றார். மற்றொரு வீராங்கனை சிம்ரஞ்ஜீத் சிங், 7-3 என்ற கணக்கில் மெக்சிகோவின் ரெபெக்காவை வீழ்த்தினார். இந்தியாவின் கும்கும் 6-0 என செக் குடியரசின் கேவிச்சை வென்றார்.
