விழுப்புரம்: ”வாய், நாக்கு இருந்தால் ஏது வேனாலும் பேசிவிடலாமா? எங்களுக்கு பேச தெரியாதா? எங்களுக்கு நாக்கு இல்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை” என, பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் காட்டமாக பேசினார்.
விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ் பேசியதாவது: நாகர்கோவிலில் ஒரு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். நான் ஏதோ திண்ணையில் படுத்து கிடந்தேன் என்கிறார். இவர் கண்டுபிடித்து விட்டார். முதல்வர் ஸ்டாலின் எங்கு பார்த்தாலும் பேசுவது நான் முத்துவேல் கருணாநிதி மகன் என்கிறார், முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயிலில் வந்தார். ஏன் எங்களுக்கு சொல்ல தெரியாதா?
நாவடக்கம் வேண்டும். முதல்வராக, கட்சிக்கு தலைவராக இருக்கறீர்கள். பொறுப்போடு பேச வேண்டும். பொறுப்பு தவறி பேசினால், எங்கள் தொண்டன் கூட பொறுத்து கொள்ள முடியாது. திருட்டு ரயில் ஏறி வந்த உங்களுக்கு இவ்வளவு என்றால், ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்து, உழைத்து, உழைப்பால் வந்தவனுக்கு எவ்வளவு இருக்கும்?
வாய், நாக்கு இருந்தால் எது வேண்டுமானாலும் பேசிவிடலாமா? எங்களுக்கு பேச தெரியாதா? எங்களுக்கு நாக்கு இல்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை. உங்களது கட்சி பொதுச்செயலாளர் ராஜாவை தட்டி கேட்க தெம்பு திராணி இல்லாத முதல்வர் ஸ்டாலின். ஒரு முன்னாள் முதல்வர் கருணாநிதியை, அப்பாவை சிறையில் வீட்டில் அடைத்து இருக்கீங்க என்றால் நாட்டு மக்களுக்கு என்ன கதி? இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
