விவசாயிகளுக்கு உதவும் கிராமப்புற கிரெடிட் ஸ்கோர்

புதுடில்லி, கிராமப்புற விவசாயிகளுக்கும், சிறு தொழில் செய்பவர்களுக்கும் எளிதாக கடன் கிடைக்க, ‘கிராமப்புற கிரெடிட் ஸ்கோர்’ முறையை பின்பற்றுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, ‘சிபில்’ ஸ்கோர் இல்லாததால் கிராமப்புற மக்களுக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இனி இவர்களின் விவசாய உற்பத்தி மற்றும் உள்ளூர் வர்த்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்கோர் கணக்கிடப்படும்.

ஸ்கோர் அடிப்படையில், வங்கி உள்ளிட்ட முறைசார்ந்த நிதி நிறுவனங்களிடம் இருந்து நியாயமான வட்டியில் விவசாயிகள் கடன் பெற இயலும். இதன் வாயிலாக கந்துவட்டி கொடுமையிலிருந்து விடுபட்டு, முறையான வங்கி சேவையை எளிய மக்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Source link