விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கடன்:பெண்களுக்குத்தான் முன்னுரிமை- விண்ணப்பிப்பது எப்படி? – up to rs 30 lakh loan for farmers at 9 percent interest women get priority how to apply

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.5,000 கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எப்படி பயன்பெறுவது என்பது குறித்த முழு விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்

தமிழக விவசாயிகளுக்கு ஊரகத் தொழில் கடன் வழங்க ரூ.5,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகச் சமீபத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு, சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும் ரூ.5,000 கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் ஆண்டுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

நெல்லையில் இந்த ஊரகத் தொழில் கடன் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், கடன் வழங்கப்பட்ட நாளிலிருந்து 36 மாதங்களுக்குள் வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் கூட்டுறவுத்துறை அறிவித்திருக்கிறது. அதோடு, தேவைக்கு ஏற்றாற்போல் ஆறு மாதங்கள் வரை தவணைச் சலுகைக் காலம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

யாருக்கு முன்னுரிமை?

இந்த ஊரகத் தொழில் கடன் திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் விளிம்புநிலைப் பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எங்கே கடன் வழங்கப்படும்?

பின்வரும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடன்வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள்மேலும், இந்தக் கடன் விவகாரம் தொடர்பாக வாரத்திற்கு இரண்டு முறை முகாம்கள் நடத்தப்பட இருப்பதாகக் கூட்டுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.

பெண்களுக்கான கடன் திட்டம்

அதேபோல, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பெண்களுக்குக் கடன் வழங்குவதற்கான முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் என்னென்ன கடன்கள் வழங்கப்படும்?

அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் முன்னுரிமைத்தொழில் கடன்திட்டங்களின் கீழ் பல்வேறு கடன்களை வழங்குவதற்கான முகாம்களும் நடத்தப்படுகின்றன.

அவற்றில்:

விவசாயக் கடன்கள் ஊரகத் தொழில் கடன்கள் வீட்டு வசதிக் கடன்கள் அடமானக் கடன்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள்உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்களுக்கான முகாம்கள் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

இந்தக் கடன்களைப் பெறுவதற்குப் பயனாளிகள் பின்வரும் ஆவணங்களைப் பயன்படுத்தலாம்: புகைப்படம் ஆதார் அடையாள அட்டை ரேஷன் கார்டு KYC ஆவணங்கள்ஆகவே, விவசாயிகள் மற்றும் தகுதியுள்ள பயனாளிகள் வாரந்தோறும் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Source link