வீட்டுப் பணியாளருக்கு உரிமையாளர் காட்டிய அன்பு; நெகிழ வைத்த வைரல் வீடியோ!

நவீன உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு நடுவே, எளிமையான அன்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைச் சில எளிய சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சமீபத்தில் வைரலான இந்தச் செய்தி, ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான உறவைத் தாண்டி, இரண்டு மனிதர்களுக்கு இடையிலான அன்பைப் பிரதிபலிக்கிறது.

தனது வீட்டு பணிப்பெண் பெண்மணி ஜோதி, சமையலறையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். ஏதோ உடல்நலக்குறைவோ அல்லது குடும்பப் பிரச்னையோ என்று அவர், மெல்லச் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டார்.

Jyoti

அப்போது அந்தப் பெண்மணி சொன்ன பதில் ஆழமான வலி கொண்டது. “இன்று எனக்கு பிறந்தநாள், ஆனால் என் குடும்பத்தினர் கூட அதை மறந்துவிட்டார்கள். யாருமே எனக்கு வாழ்த்துச் சொல்லவில்லை” என்று அவர் அழுதுகொண்டே கூறினார்.

தன் வீட்டில் தங்களுக்காக உழைக்கும் ஒரு பெண்ணின் ஆசையை உணர்ந்த அந்த நபர், அடுத்த சில நிமிடங்களிலேயே சர்ப்ரைசாக பிறந்தநாள் கேக் வாங்கி வந்தார். மற்ற குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து, அந்தப் பெண்மணியை கேக் வெட்டச் செய்து உற்சாகமாகக் கொண்டாடினார்.

இத்தகைய அன்பை எதிர்பார்க்காத அந்தத் தாய், ஆனந்தக் கண்ணீருடன் கேக் வெட்டிய காட்சி நெகிழச் செய்தது. இந்தச் சிறிய கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டது.

“விலையுயர்ந்த பரிசுகளை விட, சரியான நேரத்தில் காட்டப்படும் ஒரு சிறிய அன்புதான் ஒரு மனிதனை வாழ்நாள் முழுவதும் நெகிழச் செய்யும்” எனப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

Jyoti
Jyoti

அன்பு என்பது பகிரப்படும்போது மட்டுமே இரட்டிப்பாகிறது. இதற்காக நாம் பெரிய சாதனைகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை; சக மனிதர்களின் வலியைப் புரிந்துகொண்டு ஒரு சிறு புன்னகையைத் தந்தாலே போதும்.



Source link