புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அனிஷ் (25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’) வெண்கலம் வென்றார்.
டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனிஷ் (574.16 புள்ளி), ஆதர்ஷ் சிங் (573.17) முறையே 6, 7வது இடம் பிடித்தனர். மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (561.9) 16வது இடம் பிடித்தார்.
25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’ அணிகள் பிரிவில் அனிஷ், ஆதர்ஷ் சிங், நீரஜ் குமார் அடங்கிய இந்திய அணி, 1708.42 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.
25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’ தனிநபர் பிரிவில் இந்தியாவின் அனிஷ் (23 புள்ளி) 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். ஆதர்ஷ் சிங் (11) 6வது இடத்தை கைப்பற்றினார்.
ஜூனியர் ஆண்களுக்கான 25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’ தனிநபர் பிரிவில் சூரஜ் சர்மா (23 புள்ளி), முகேஷ் (19) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். இதன் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான 50 மீ., ‘ரைபிள் புரோன்’ தனிநபர் பிரிவில் இந்தியாவின் பாபு சிங் பன்வார் (621.3) வெண்கலம் வென்றார். இதன் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது.
