பாப்ஹாஸ்: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் திவ்யா-வைஷாலி மோதிய போட்டி ‘டிரா’ ஆனது.
சைப்ரஸ் தீவில் ‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடர் (ஆண்கள், பெண்கள்) நடக்கிறது. பெண்கள் பிரிவில் உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா 20, வைஷாலி 24, உட்பட 8 பேர் பங்கேற்கின்றனர். இதன் இரண்டாவது சுற்றில் திவ்யா-வைஷாலி மோதினர். திவ்யா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
34வது நகர்த்தலில் வைஷாலி செய்த தவறான நகர்த்தலால், திவ்யா வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டது. மாறாக, 37வது நகர்த்தலில் திவ்யா செய்ய தவறை பயன்படுத்திய வைஷாலி, அடுத்தடுத்து சிறப்பாக மீண்டு வந்தார். முடிவில் 44 நகர்த்தலில் போட்டி ‘டிரா’ ஆனது. 2 சுற்று முடிவில் 8 வீராங்கனைகளும் தலா 1.0 புள்ளி பெற்றுள்ளனர்.
பிரக்ஞானந்தா ‘டிரா’
ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 8 பேர் பங்கேற்கின்றனர். இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா, சீனாவின் வெய் இ மோதினர். இப்போட்டி 46 நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. இரண்டு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, பேபியானோ, ஜாவோகிர் (உஸ்பெகிஸ்தான்) தலா 1.5 புள்ளியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர்.
