வெற்றி கேப்டன் தோனி

ஐ.பி.எல்., அரங்கில், அதிக வெற்றி பெற்றுத்தந்த கேப்டன் பட்டியலில் தோனி முதலிடம். மொத்தம் 235 போட்டிக்கு கேப்டனாக களமிறங்கிய தோனி, 136 வெற்றி, 97 தோல்வியை பெற்றுத்தந்தார். இரண்டு போட்டிக்கு முடிவு இல்லை. இதில் சென்னை அணிக்கு 221 (131 வெற்றி, 88 தோல்வி, 2 முடிவு இல்லை), புனே அணிக்கு 14 போட்டிகளுக்கு (5 வெற்றி, 9 தோல்வி) கேப்டனாக இருந்தார்.

278 போட்டி

ஐ.பி.எல்., அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் தோனி முதலிடம். இவர் 278 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அடுத்த நான்கு இடங்களில் ரோகித் (272 போட்டி), கோலி (267), தினேஷ் கார்த்திக் (257), ஜடேஜா (254) உள்ளனர்.

சூப்பர் கீப்பர்

ஐ.பி.எல்., லீக் தொடரில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்க வித்திட்ட விக்கெட் கீப்பர் வரிசையில் தோனி முதலிடத்தில் உள்ளார். 278 போட்டியில் கீப்பராக அசத்திய தோனி, 154 ‘கேட்ச்’, 47 ‘ஸ்டம்பிங்’ உட்பட 201 விக்கெட் விழ காரணமாக இருந்தார். அடுத்த 3 இடங்களில் தினேஷ் கார்த்திக் (174), விரிதிமன் சகா (113), ரிஷாப் பன்ட் (101) உள்ளனர்.

ஐந்து கோப்பை

ஐ.பி.எல்., லீக் அரங்கில் தோனி தலைமையிலான சென்னை அணி 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியன் ஆனது. அதிக முறை (தலா 5) கோப்பை பெற்றுத்தந்த கேப்டன் பட்டியலில் முதலிடத்தை ரோகித் சர்மாவுடன் (மும்பை, 2013, 2015, 2017, 2019, 2020) பகிர்ந்து கொண்டுள்ளார்.

* சாம்பியன்ஸ் லீக் அரங்கில் அதிக கோப்பை (தலா 2) வென்ற கேப்டன் பட்டியலிலும் தோனி (2010, 2014), ரோகித் (2011, 2013) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Source link