வெற்றி 150 நாள் வேலைத்திட்டம்: 6 பிரிவினருக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை? அரசு வெளியிட்ட புதிய அரசாணை – vetri 150 day employment scheme who is eligible for the additional 25 days of work in tamil nadu

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எனப்படும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை VB-G RAM G திட்டம் என மாற்றியது. மேலும், இந்தத் திட்டத்திற்கு வழங்கி வந்த நிதியையும் ஒன்றிய அரசு குறைத்தது.

தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்ற பிறகு, இந்தத் திட்டத்தைவெற்றி 150 நாள் திட்டம் என மாற்றி உத்தரவிட்டது. இந்தச் சூழலில்தான், இந்தத் திட்டத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு மட்டுமே 150 நாட்கள் வேலை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், 125 நாட்கள் வேலைவாய்ப்பைப் பூர்த்தி செய்திருந்தால், முன்னுரிமை அடிப்படையில் நலிவடைந்த குடும்பங்களுக்கு மட்டும் கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

முன்னுரிமை பெறக்கூடிய பயனாளிகள்

– பெண்கள் குடும்பத் தலைவராக இருக்கும் குடும்பங்கள்.

– சிங்கிள் பேரண்ட் எனச் சொல்லப்படும், பெண்கள் குழந்தைகளைத் தனியாக வளர்க்கும் குடும்பங்கள்.

– மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள்.

– பட்டியலினக் குடும்பங்கள்.

– பழங்குடியினக் குடும்பங்கள்.

– வன உரிமைகள் அங்கீகாரச் சட்டத்தின் மூலம் பயனடைந்த பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பிற பாரம்பரிய வனவாசிக் குடும்பங்கள்.

ஆகியோருக்கே 150 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் இருந்துரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்திக் கூடுதல் 25 நாட்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் 150 நாட்கள் வேலை கிடைக்குமா?

இதன் மூலம் கூடுதல் 25 நாட்கள் வேலைவாய்ப்பு அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படப் போவதில்லை. ஏற்கனவே 125 நாட்கள் வேலைவாய்ப்பைப் பூர்த்தி செய்துள்ள, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நலிவடைந்த குடும்பங்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்.

Source link