வெளிமாநிலத் தொழிலாளர்கள் 'டேபிள்' துடைக்கின்றனர். கட்டுமான வேலை செய்கின்றனர். பானிபூரி விற்கின்றனர் என,

வெளிமாநிலத் தொழிலாளர்கள் ‘டேபிள்’ துடைக்கின்றனர். கட்டுமான வேலை செய்கின்றனர். பானிபூரி விற்கின்றனர் என, மொழி பிரச்னைக்காக அமைச்சர்கள் சுட்டிக்காட்டி பேசியிருப்பர். அது தேவையில்லாதது தான். ஆனால், வடமாநிலத் தொழிலாளர்களை பிரித்து, அமைச்சர்கள் பேசவில்லை. ஹிந்தி எதிர்ப்பு பிரசாரத்தை முன்னிலைப்படுத்துவதற்காக, வடமாநிலத் தொழிலாளர்கள் செய்யும் வேலை குறித்துதான் பேசினர்; அதில் தவறு இல்லை.

தமிழ், ஆங்கிலம் என, இருமொழிக் கொள்கை காரணமாக, தமிழக இளைஞர்கள், மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து, கைநிறைய சம்பாதிக்கின்றனர். அதற்கு காரணம் தி.மு.க.,வின் மொழிக்கொள்கை தானே. எனவே, தமிழர்களை புகழ்ந்து பேசினர். எந்த வேலையும் சிறிய வேலை அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர் களும், தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை உணர்ந்தே, தி.மு.க.,வினர் மேடையில் பேசி வருகின்றனர்.

– டி.கே.எஸ்.இளங்கோவன், செய்தி தொடர்புக்குழு செயலர், தி.மு.க.,

Source link