வெள்ளி வென்றார் நீலம்

ஜாக்ரெப்: ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த தொடரில் இந்தியாவின் நீலம், வெள்ளி வென்றார்.

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில், சர்வதேச மல்யுத்த ஓபன் ‘ரேங்கிங்’ தொடர் நடக்கிறது. நேற்று பெண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. 50 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நீலம், ஜப்பானின் ஹாருனா மோதினர். இதில் நீலம் 2-5 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

மற்றொரு வீராங்கனை முஸ்கான், 10-0 என போலந்தின் அகதா மார்டாவை வீழ்த்தி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். 55 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜோதி, 0-7 என ஜப்பானின் நகசியாவிடம் தோல்வியடைந்தார்.

ஆண்கள் 65 கிலோ பிரிவில், இந்தியாவின் சுஜீத், 0-3 என ஈரானின் பேமன் அலியை சாய்த்து, தங்கம் கைப்பற்றினார். இந்தியாவின் அமன் ஷெராவத் (61) வெள்ளிப்பதக்கம் பெற்றார். மற்ற போட்டிகளில் அபிமன்யு (70), விக்கி (97), தினேஷ் (127) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். இதுவரை இத்தொடரில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா 7 பதக்கம் வென்றுள்ளது.

Source link