பிஷ்கெக்: கஜகஸ்தானில் ஆசிய ‘சீனியர்’ மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ பிரிவில் போட்டிகள் நடந்தன. 53 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் மீனாக் ஷி, சீனாவின் ஜின் ஜங்கை எதிர்கொண்டார். இதில் மீனாக் ஷி, 0-10 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
72 கிலோ பிரிவு அரையிறுதியில் தோற்ற இந்தியாவின் ஹர்ஷிதா, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தானின் செவின்சாய்யை சந்தித்தார். இதில் ஹர்ஷிதா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 65 கிலோ பிரிவில் இந்தியாவின் மோனிகா, 9-0 என தென் கொரியாவின் ஹன்பித் லீயை சாய்த்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
சுஜீத் அபாரம்
ஆண்களுக்கான 65 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுஜீத், 7-2 என ஈரானின் அப்துல்மஜித்தை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் அபிமன்யு (70 கிலோ), 6-3 என கிர்கிஸ்தானின் எர்நாசரை சாய்த்தார். இந்தியாவின் சந்தீப் சிங் மான், 10-0 என ஈரானின் இக்ரமோவை வென்று, பைனலுக்குள் நுழைந்தார். இதுவரை இத்தொடரில் இந்தியா 3 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்றுள்ளது.
