வேட்பாளர் பட்டியல் இழுபறி- காங்கிரஸ் அலுவலகத்தில் நிகழ்ந்த பகீர் சம்பவம்

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில் திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை பெற்றுள்ள காங்கிரஸ் தற்போது வரை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாத நிலை உள்ளது.  டெல்லி காங்கிரஸ் தலைமையில் செல்லப்பெருந்தகை கொடுத்த வேட்பாளர் பட்டியலுக்குக் கட்சியிலேயே பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. தொடர்ந்து காங்கிரஸில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில்  இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இன்னும் சில நாட்களே வேட்புமனு தாக்கலுக்கு உள்ள நிலையில் சென்னை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்த காங்கிரஸ் சேவா தள பெண் உறுப்பினர் ஒருவர் டீசல் கேன் உடன் வந்திருந்தார். குங்ஃபூ விஜயனுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என அவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link