வே லை இல்லாத இளைஞர்களுக்கு 2,000 – 4,000 ரூபாய் கொடுக்கிறோம் என்பதை விட, அப்பணத்தை வைத்து நிலையான வளர்ச்சியை

வே லை இல்லாத இளைஞர்களுக்கு 2,000 – 4,000 ரூபாய் கொடுக்கிறோம் என்பதை விட, அப்பணத்தை வைத்து நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவது தான் வளர்ச்சி.

இவ்வாறான வளர்ச்சியை தரும் தலைவர்களை நாம் தேர்வு செய்வதில்லை; இலவசங்களையும், வெற்று அறிவிப்புகளையும் கொடுத்து ஏமாற்று பவர்களை தான் தேர்வு செய்கிறோம்.

ஆட்சியாளன் தவறான, அநீதியான, கொடுமையான ஆட்சி செய்தால் அவன் மட்டும் பொறுப்பல்ல; அவனது குற்றம் மட்டும் பொறுப்பல்ல; ஆட்சியில் அமர வைத்த மக்களும் குற்றவாளிகள்.

குற்றம் செய்தவருக்கே மீண்டும் ஓட்டளிப்பது தான் பெரிய குற்றம். இவற்றை நான், 15 ஆண்டுகளாக உங்களிடம் பேசுவதற்கு பதிலாக சுடுகாட்டில் கத்தியிருந்தால், 10 பிணமாவது எழுந்து வந்து, என்னய்யா உன் பிரச்னை என்று கேட்டிருக்கும். இப்படி பேசி, 36 லட்சம் பேரை உசுப்பேற்றி வைத்துள்ளேன். இம்முறை எத்தனை பேருக்கு சூடு, சொரணை, மானம், ரோஷம் உள்ளிட்டவை இருக்கிறது என்று பார்ப்போம்.

நா ம் தமிழர் கட்சி அமைக்கும் ஆட்சியில் இலவசத்திற்கு மாற்றாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் அங்காடிகள் துவக்கி, அவற்றில் குறைந்த கட்டணத்தில், மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்வேன். இதை வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை; செய்து காட்டுவேன். சத்தியமாக செய்வேன். ஒருவன் கையேந்தினால் பிச்சை; நாடே கையேந்தினால் இலவசம். இந்நிலையை மாற்ற போராடும் எனக்கு ஓட்டு போடுங்கள். உதயசூரியன், இரட்டை இலை, கை சின்னத்தில் போட்டு தோற்றீர்கள். இம்முறை எண்ணத்தை மாற்றுங்கள்; சின்னத்தையும் மாற்றுங்கள். இனியாவது விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு, நீங்கள் வெற்றி பெறுங்கள். உங்களை இலவசம் என்ற பிச்சை எடுக்க விட மாட்டேன். நான் ஆட்சிக்கு வந்தால், ‘ஓசி பஸ்’ ஓட்ட மாட்டேன். தயவு செய்து ஓசி பஸ்ல போற யாரும் எனக்கு ஓட்டு போட வேண்டாம். நான் ‘ஏசி பஸ்’ தர்றேன்; அதில் பணம் கொடுத்து போ. காசுக்கு வேலை தர்றேன்; சம்பளம் தர்றேன். உன்னை நீயே சார்ந்து வாழும் வாழ்க்கை தர்றேன்.

தெ ன்காசி மாவட்டம், மருதம்புத்துாரில், பனை தொழிலாளி மணிகண்டன் மீது, போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது, கடும் கண்டனத்துக்குரியது. சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் படுகொலை வழக்கின் தீர்ப்பை பார்த்த பின்னும், தமிழக போலீசார் எந்த பாடமும் கற்றுக் கொள்ளாமல், மனசாட்சி இல்லாமல் அப்பாவி மக்கள் உயிருடன் தொடர்ந்து விளையாடுகின்றனர். அப்படி விளையாடுவது வெட்கக்கேடு. கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையால், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துள்ளன. அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தடுமாறுகிறது. குற்றமிழைத்த குற்றவாளிகளை பிடிக்கத் திறனற்ற போலீசார், கள் இறக்கும் எளியவர்களை, கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள் போல் தேடி வேட்டையாடுகின்றனர். உடலுக்கு எந்த தீங்கும் செய்யாத கள்ளை, போதைப் பொருள் என தடை செய்துள்ள தி.மு.க., அரசு, தன் நேரடி நிர்வாகத்தில் ‘டாஸ்மாக்’கில் விற்றுக் கொண்டிருக்கிறதே, அது புனித தீர்த்தமா?

Source link