வைஷ்ணவி-அன்கிதா ஜோடி சாம்பியன்

கலபுராகி: கர்நாடகாவின் கலபுராகி நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா, வைஷ்ணவி ஜோடி, சக இந்தியாவின் சோஹா, ஆகான்ஷா ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 2 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அன்கிதா, வைஷ்ணவி ஜோடி, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, நெதர்லாந்தின் கிம்ப்ரெரேவை சந்தித்தார். ஒரு மணி நேரம் 13 நிமிடம் நடந்த போட்டியில் வைஷ்ணவி, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, தாய்லாந்தின் நக்லோவை எதிர்கொண்டார். 2 மணி நேரம், 53 நிமிடம் நீடித்த போராட்டத்தின் முடிவில் அன்கிதா, 4-6, 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இன்று நடக்கும் பைனலில் இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி, அன்கிதா மோதுகின்றனர்.

Source link