ஷியோபூர்: மத்திய பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நமீபிய நாட்டு சிவிங்கிபுலி ஐந்து குட்டிகளை ஈன்றதை

ஷியோபூர்: மத்திய பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நமீபிய நாட்டு சிவிங்கிபுலி ஐந்து குட்டிகளை ஈன்றதை அடுத்து, நம் நாட்டில் உள்ள சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை, 53 ஆக உயர்ந்து உள்ளது.

நம் நாட்டில் வாழ்ந்து வந்த சிவிங்கிபுலிகள் அழிந்ததை அடுத்து, அதற்கான மறுவாழ்வு திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தது. அதன்படி, 2022 – 23ல், தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து 30 சிவிங்கிபுலிகள் இந்தியா அழைத்து வரப்பட்டன.

மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சில சிவிங்கிபுலிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. ஒரு சில சிவிங்கிபுலிகள் குட்டி களை ஈன்றன.

இந்நிலையில், நமீபியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு, குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஜ்வாலா என்ற சிவிங்கிபுலி, ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த தகவலை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் சமூக வலைதள பக்கத்தில், ‘நமீபியாவைச் சேர்ந்த ஜ்வாலா சிவிங்கிபுலி, நம் நாட்டு மண்ணில் மூன்றாவது முறையாக குட்டிகளை ஈன்றுள்ளது. தற்போது, ஐந்து குட்டிகளை ஜ்வாலா பெற்றெடுத்ததை அடுத்து, நம் நாட்டில் உள்ள சிவிங்கிபுலிகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இது, நம் நாட்டில் சிவிங்கிபுலி பாதுகாப்பு பயணத்தில் மற்றொரு மைல்கல்’ என தெரிவித்துள்ளார்.

Source link