ஷியோபூர்: மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில், நம் நாட்டில் பிறந்த 25 மாத பெண் சிவிங்கிப்புலி நான்கு

ஷியோபூர்: மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில், நம் நாட்டில் பிறந்த 25 மாத பெண் சிவிங்கிப்புலி நான்கு குட்டிகளை நேற்று ஈன்றது.

நிலத்தில் வாழும் விலங்கினங்களிலேயே மிக வேகமாக ஓடக்கூடியவை என்று அறியப்படும் சிவிங்கிப்புலிகள், 1950-களில் இந்தியாவில் முற்றிலுமாக அழிந்துபோயின. சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கில் அதற்கான மறுவாழ்வு திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தது.

அதன்படி, 2022 – 23ல், தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து 30 சிவிங்கிபுலிகள் இந்தியா அழைத்து வரப்பட்டன. மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சில சிவிங்கிபுலிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. ஒரு சில சிவிங்கிபுலிகள் குட்டிகளை ஈன்றன.

இந்நிலையில், ‘காமினி’ என்ற சிவிங்கிப்புலியின் வம்சாவளியைச் சேர்ந்த நம் நாட்டில் பிறந்த 25 மாத வயதுடைய ஒரு பெண் சிவிங்கிப்புலி வனப்பகுதியில் நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இதன்மூலம் நம் நாட்டில் உள்ள சிவிங்கிப்புலிகளின் மொத்த எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

‘நம் நாட்டில் பிறந்த சிவிங்கிப்புலி ஒன்று குட்டிகளை ஈனுவது இதுவே முதல்முறை’ என, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

Source link