ஷெஃப் தாமு: ஊருக்கு புதுசு, தங்க இடமில்ல, ரயில்வே ஸ்டேஷன்ல தூங்கிய கின்னஸ் சாதனை நாயகன்

தாமு மறைந்தார்: ஷெஃப் தாமு அக்டோபர் 25ம் தேதி காலை மரணம் அடைந்தார். தொடர்ந்து 24 மணிநேரம் 30 நிமிடங்கள் சமைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அவரின் மரண செய்தி வெளியானபோது முதலில் யாரும் அதை நம்பவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு தான் தாமு இறந்துவிட்டார் என வதந்தி பரவ அதை பார்த்துவிட்டு அவரே இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்து நான் நலமாக இருக்கிறேன் என்றார்.

அதனால் இம்முறை வெளியான தகவலும் வதந்தி என நினைத்த நிலையில் அது உண்மையாகிவிட்டது. தாமுவுக்கு மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். சிறு வயதில் இருந்தே அவருக்கு சமையல் மீது தான் ஆர்வம். ஆனால் அதை வீட்டில் சொன்னபோது, சரிப்பா மகனே உன் விருப்பம்போல் படி என அவர்கள் கூறவில்லை.

பிடித்த படிப்பு: இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசியிருந்தார். தாமு கூறியதாவது, நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கப் போகிறேன் என்று சொன்னபோது அதற்கு அம்மா சம்மதம் தெரிவிக்கவில்லை. நான் எவ்வளோ விளக்கமாக எடுத்துச் சொல்லியும் கூட என் விருப்பத்திற்கு எதிராக பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படிக்குமாறு கல்லூரியில் சேர்த்தார்கள்.

எனக்கு பிடிக்காத விஷயத்தை படிப்பதில் நான் ஆர்வம் காட்டவில்லை. அதனால் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்தேன். அதை பார்த்துவிட்டு தான் நான் ஆசைப்பட்ட ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கச் சொல்லு அனுப்பி வைத்தார்கள்.

மும்பை, சென்னை: மூன்று ஆண்டுகள் சமையல் கலையில் ஆர்வம் காட்டி தங்கப் பதக்கம் பெற்றேன். படித்துக் கொண்டே சுதர்ஷன் இன்டர்நேஷனலில் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் மும்பை தாஜ் ஹோட்டலில் எனக்கு வேலை கிடைத்தது. நான் மும்பைக்கு சென்றபோது எனக்கு இந்தி தெரியாது. மேலும் தங்கவும் இடம் இல்லை. அதனால் தாஜில் வேலை பார்த்துக் கொண்டு மும்பை ரயில் நிலையத்தில் தங்கியிருந்தேன். அங்கு தான் குளித்தேன், தூங்கினேன். இப்படித் தான் சில நாட்கள் ஓடின.

இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன். அதன் பிறகு எல்லாம் பழகிவிட்டது.சில ஆண்டுகள் கழித்து சென்னையில் வேலை கிடைத்து வந்தேன். ஏற்கனவே நிறைய அடி வாங்கிய அனுபவம் இருந்ததால் சென்னைக்கு வந்தபோது எல்லாம் எளிதாக இருந்தது. அந்த துறையில் 14 ஆண்டுகள் வேலை பார்த்தேன். என் கெரியரின் துவக்கத்தில் ரொம்ப கஷ்டப்பட்டதால் தான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றார்.தாமு அப்பா: செப்டம்பர் 3ம் தேதி தன் 72வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடினார் தாமு. தன் அப்பாவை வாழ்த்தி இளைய மகள் அக்ஷயா போட்ட இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்து தற்போது ரசிகர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். என்ன அவசரம் என சென்றுவிட்டீர்கள் அப்பா என கேட்கிறார்கள்.
தாமுவை அவரின் மகள்கள் மட்டும் அல்ல அவரை நன்கு தெரிந்த பலரும் அன்புடன் அப்பா என்று தான் அழைத்து வந்தார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த தாமுவை அந்த ஷோவில் கலந்து கொண்ட அனைவரும் ரொம்ப மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

புகழ் கதறல்: குக் வித் கோமாளியில் பங்கேற்ற புகழோ ஏன்பா இப்படி சொல்லாமல் போயிட்டீங்க. இந்த நேரம் நான் வெளிநாட்டில் இருக்கிறேனே. இப்போ டிக்கெட் புக் செய்தால் கூட சென்னை வர இரண்டு நாட்களாகுமாமே. எனக்கு பாசமாக முத்தம் கொடுப்பீங்களே. அப்பா நான் என்ன செய்வேன்?. உடம்பை பார்த்துக்கச் சொன்னேனே.

என்னிடம் ஏன் சொல்லவில்லை?. அப்பா இறந்துவிட்டார். நீ எனக்கு அப்பாவா இருக்கீங்களே என இருந்தேனே. இப்போ என்னை அப்பா இல்லாத அனாதையாக ஆக்கிட்டீங்களே. உன்னைய பார்க்க முடியாதா அப்பா?. இப்படி செய்துவிட்டியே அப்பா. கடைசியாக ஒரு முறை முத்தம் கொடுக்க உன்னை பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்படி தனியாக புலம்பவிட்டுட்டியே. எனக்கு மகள்கள் தான் புள்ளயா நீ இருக்கடானு சொன்னியே என்று அழுது புலம்பி வீடியோ வெளியிட்டார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

மேலும் ஷெஃப் வெங்கடேஷ் பட் தாமுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டதுடன் அவரின் வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலியும் செலுத்தியிருக்கிறார்.

Source link