மறைந்த நடிகர் முரளியின் மனைவியும் நடிகர் அதர்வாவின் அம்மாவுமான ஷோபா முரளிக்கு நேற்று அதர்வா, அவரின் தம்பி ஆகாஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் சேர்ந்து சஷ்டிபூர்த்தி நிகழ்ச்சி நடத்தினர்.
நடிகர் முரளி – ஷோபா திருமணம் காதல் திருமணம். இந்த தம்பதிக்கு காவ்யா, அதர்வா, ஆகாஷ் என மூன்று பிள்ளைகள்.
2010ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக முரளி இறந்து விட்டார்.
இந்தப் பின்னணியில் தற்போது ஷோபா அறுபது வயதை நிறைவு செய்ய, அம்மாவுக்கு சஷ்டிபூர்த்தி நிகழ்ச்சி நடத்த விரும்பியிருக்கிறார்கள் அதர்வா மற்றும் அவரது அக்கா, தம்பி ஆகியோர்.
முதலில் இதற்கு இசைவு தெரிவிக்க ஷோபா தயங்கியதாகத் தெரிகிறது. ஆனால் ஒருகட்டத்தில் பிள்ளைகளின் விருப்பம் காரணமாக சம்மதித்தாராம்.
அதன்படி நேற்று (7/4/26) காலை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இந்த நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்திருக்கிறது.
அதர்வா அவரது சகோதரி குடும்பத்தினர், தம்பி ஆகாஷ் அவரது மனைவி சிநேகா, தவிர நெருங்கிய சில உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
சஷ்டி பூர்த்திக்கான சடங்குகளுடன் நிகழ்ச்சி நிறைவடைய அம்மாவிடம் ஆசி வாங்கினார்களாம் பிள்ளைகள் மூவரும்.
முரளி இருந்த வரை சினிமா நிகழ்ச்சிகளுக்கே கூட வர அவ்வளவாக ஆர்வம் காட்டாதவராகவே இருந்து வந்தார் ஷோபா,
அப்படி இருந்தவரை கடந்தாண்டு தனது தம்பியின் பட விழா மேடையில் ஏற்றி அழகு பார்த்தார் அதர்வா,
தற்போது பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து ஷோபா முரளிக்கு சஷ்டிபூர்த்தி நிகழ்ச்சி நடத்தி நெகிழ வைத்திருக்கிறார்கள். !
