ஸ்குவாஷ் காலிறுதியில் தான்வி

ஹாங்காங்: எகிப்தின் கிஜா நகரில் ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடர் வரும் மே 8-16ல் நடக்க உள்ளது. இதற்கான ஆசிய பிரிவு தகுதிச்சுற்று நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தான்வி கன்னா, ‘சீனியர்’ ஜோஷ்னா சின்னப்பா பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் தான்வி கன்னா, மக்காவின் கிஜி இயுங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 11-9 என கைப்பற்றிய தான்வி, அடுத்த இரு செட்டுகளை 11-6, 11-4 என கைப்பற்றினார். முடிவில் தான்வி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, ஹாங்காங்கின் கிறிஸ்டி வாங்கை சந்தித்தார்.

முதல் செட்டை 12-10 என வசப்படுத்திய ஜோஷ்னா, அடுத்த இரு செட்டை 9-11, 4-11 என இழந்தார். 4வது செட்டையும் 3-11 என கோட்டை விட்டார். முடிவில் ஜோஷ்னா 1-3 என தோல்வியடைந்தார்.

Source link