'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் தகவல் பெற ஒன் — டி.என்., இணையதளம் துவக்கம்

சென்னை : தமிழகத்தில், ‘ஸ்டார்ட் அப்’ மற்றும் புத்தாக்கம் சார்ந்து இயங்கும் அரசு துறைகள் மற்றும் தனியார் மையங்களின் வசதி, சேவை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒரே தளத்தில் தெரிந்து கொள்வதற்கு, ‘ஒன் டி.என்’ இணையதளத்தை, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் உட்பட பல்வேறு பிரிவுகளில், ‘ஸ்டார்ட்அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனங்களுக்கு, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் மட்டுமின்றி, ‘சிப்காட்’, ‘சிட்கோ’, பேம் டி.என்., உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு ஆதரவுகளை வழங்குகின்றன.

அவை, பல நிறுவனங்களுக்கு தெரிவதில்லை. எனவே, ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்கம் சார்ந்து இயங்கும் அரசு துறைகள் மற்றும் தனியார் மையங்களின் வசதிகள், சேவைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒரே தளத்தில் தெரிந்து கொள்ளும் வகையில், ‘ஒன் டி.என்’ இணையதளத்தை ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதன் வாயிலாக, இந்த தளத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பல்வேறு அரசு துறைகளின் விபரங்களையும், தனியார் தொழில்முனைவு ஆர்வலர்கள், முதலீட்டாளர்கள் விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

‘ஸ்டார்ட்அப்’ சார்ந்து இயங்கும் அரசு துறைகள் மற்றும் தனியார் மையங்களின் வசதி, சேவை போன்ற எல்லா தகவல்களையும் ஒரே தளத்தில் தெரிந்து கொள்ள ‘ஒன் டி.என்’ இணையதளம் துவக்கம்

Source link