ஸ்டாலினின் கொளத்தூர்; உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதிகளில் விஜய் இறக்கும் வேட்பாளர்கள் யார்? | TVK Vijay’s Candidates for Chepauk and Kolathur

அதேமாதிரி, உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதிக்கும் சரியான கேண்டிடேட் வேண்டுமென்று விஜய் தரப்பு பல வாரங்களாக யாருடைய பெயரையும் டிக் அடிக்காமல் இருந்திருக்கிறது. மாவட்டச் செயலாளர் திலீப்பிடம் தலைமை எதிர்பார்க்குமளவுக்கு ‘வைட்டமின் ப’ இல்லாததால் வேறு சிலரை வேட்பாளராக்க முயன்றிருக்கிறார்கள்.

டி.செல்வம்

டி.செல்வம்

ஆனால், உதயநிதி தொகுதி என்பதால் பலரும் ரிஸ்க் எடுக்கவும் செலவும் செய்யவும் தயங்கியதாக கூறுகின்றனர் முக்கிய நிர்வாகிகள். இதனால் கடைசி வரை சேப்பாக்கம் தொகுதி மட்டும் டிக் ஆகாமலே இருந்திருக்கிறது. இந்நிலையில்தான் காங்கிரஸிலிருந்து சமீபத்தில் வெளியேறி தவெகவில் இணைந்த டி.செல்வத்திடம் சேப்பாக்கம் கார்டை நீட்டியிருக்கிறார்கள். கட்சியில் சேர்ந்தவுடனேயே இவ்வளவு முக்கியமான தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பா என்கிற ஆர்வத்தில் செல்வமும் உதயநிதியை எதிர்க்க ஓகே சொல்லிவிட்டதாக கூறுகின்றனர் விஜய்க்கு நெருக்கமான நிர்வாகிகள்.

வேட்பாளர் பட்டியல் சம்பந்தமான கடைசி நிமிட வேலைகள் தேனாம்பேட்டை தவெக வார் ரூம் அலுவலகத்தில் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இறுதி நேரத்தில் ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம் இருந்தாலும் ஆச்சர்யமில்லை என்கின்றனர்.

Source link