ஸ்டிக்கர் ஒட்டிய தி.மு.க., அரசு: பா.ஜ.,

திருநெல்வேலி: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி:

சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு பல மடங்கு உயர்த்தியது தி.மு.க., அரசு. மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை அமல்படுத்தவில்லை. மத்திய அரசு தமிழகத்திற்கு சாலைகள், பாலங்கள் அமைக்க ரூ.14 லட்சம் கோடி ரூபாய் வழங்கியது.

ஆனால் மத்திய அரசு எதையும் செய்யவில்லை என தி.மு.க., பொய் பிரசாரம் செய்கிறது. மத்திய அரசு வழங்கும் ரேஷன் பொருட்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி, தாங்களே கொடுப்பது போல செய்த த.வெ.க., தனித்துப் போட்டியிடுவதும், கூட்டணி அமைப்பதும் அவர்களின் உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link