ஸ்டீல் ஏற்றுமதி 37 சதவீதம் உயர்வு

புதுடில்லி: நாட்டின் ‘பினிஷ்டு ஸ்டீல்’ எனும் ‘பயன்பாட்டுக்கு தயாரான’ ஸ்டீல் ஏற்றுமதி 2025 – 26ன், ஏப்., – – பிப்., காலகட்டத்தில் 60.20 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட இது 36.60 சதவீத வளர்ச்சி ஆகும். அரசு தரவுகளிலிருந்து இத்தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியா, கச்சா ஸ்டீல் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாகும்.

ஏற்றுமதி அதிகரித்தாலும், நடப்பு நிதியாண்டின் ஏப்., – – பிப்., -காலகட்டத்தில் 56 லட்சம் டன் அளவுக்கு பயன்பாட்டுக்கு தயாரான ஸ்டீலை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. எனினும், இது முந்தைய ஆண்டைவிட, 37.40 சதவீதம் குறைவு.

இந்தியாவின் கச்சா ஸ்டீல் உற்பத்தி, 2025- – 26 நிதியாண்டின் 11 மாதங்களில் 15.36 கோடி டன் அளவுக்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட இது, 11.20 சதவீத வளர்ச்சியாகும்.

Source link