துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 790 புள்ளிகளுடன் தொடர்ந்து ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார்.
தென் ஆப்ரிக்காவின் லாரா வால்வார்ட் (782), ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனே (749) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (652) 8வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் ஏமாற்றிய ஜெமிமா (635) 12வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி (614) 10 வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் அலானா கிங் (775) முதலிடத்தில் உள்ளார்.
