ஸ்ரீநகர் : காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீர் வளர்ச்சி அடைந்துள்ளது என இமாம்

ஸ்ரீநகர் : காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீர் வளர்ச்சி அடைந்துள்ளது என இமாம் உமர் அஹமது இலியாசி கூறியுள்ளார்.

அகில இந்திய இமாம் அமைப்புகளின் தலைமை இமாம் ஆன உமர் அஹமது இலியாஸி கூறியதாவது: காஷ்மீர் மாநிலம் மாறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, புதிய காஷ்மீர் உருவாகி உள்ளது. மாநிலம் முழுவதும் மகிழ்ச்சி நிலவுகிறது. சுற்றுலா அதிகரித்துள்ளது. காஷ்மீர் வக்ப் வாரியம் முன்மாதிரியாக திகழ்கிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் விரைவில் நம்முடன் இணையும். மாநிலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை பார்த்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

போர் யாருக்கும் நல்லது அல்ல. மேற்காசியாவில் நடக்கும் போர் விவகாரத்தில் பிரதமர் மோடி மத்தியஸ்தம் செய்து அதனை முடிவுக்கு கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவை மத்திய அரசு 2019ம் ஆண்டு நீக்கியது. இதற்கு காங்கிரஸ் , தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த சட்டம் நீக்கத்தினால், மாநிலத்தில் அமைதி திரும்பி வளர்ச்சி பெறும் என மத்திய அரசு பல முறை கூறியுள்ளது. இந்த சட்டத்தை நீக்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Source link