ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அதன்படி, அப்பகுதியில் போலீசார், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இந்த வனப்பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Source link