ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க் கிழமை காலை கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 1-ம் தேதி பங்குனி உத்திரம் அன்று ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
108 வைணவ திருத்தலங்களில் சிறப்புமிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்ததால் முப்புரி ஊட்டிய ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் மகளாக அவதரித்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் கண்ணனை நினைத்து திருப்பாவை பாடி, பாவை நோன்பிருந்தார். அதன் பலனாக பங்குனி உத்திர நாளில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாரை கரம் பிடித்தார் என்பது கோயில் வரலாறு. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருப்பாவை பாடல் பாடப்படுகிறது.
