ஹரியானாவிலிருந்து டில்லிக்கு கூடுதல் தண்ணீர் தர கோரிக்கை

புதுடில்லி, ”ஹரியானா மாநிலத்திலிருந்து டில்லிக்கு கூடுதல் தண்ணீர் வழங்க கோரி வருகிறோம்,” என, மாநில பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஸ் சாகிப் சிங் கூறினார்.

தினமும், டில்லியின் தண்ணீர் உற்பத்தி 900 – 1000 எம்.ஜி.டி., எனும், மில்லியன் காலன்ஸ் பெர் டே என்ற அளவில் உள்ளது. இது, தினமும் சராசரியாக, 1260 எம்.ஜி.டி.,யாக இருக்கிறது. வரவுக்கும், செலவுக்கும் இடையேயான வித்தியாசம் அதிகமாக உள்ளதால், ஹரியானா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீரை டில்லி பெற்று வருகிறது.

இந்நிலையில், மாநில நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஸ் சாகிப் சிங் நேற்று கூறியதாவது:

ஹரியானா மாநிலத்தில் இருந்து பெறப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க, அந்த மாநில அரசிடம் கேட்டுள்ளோம். ஹரியானாவிலிருந்து வரும் தண்ணீர் பல இடங்களில் வீணாகிறது. அதை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அந்த மாநிலத்திலிருந்து டில்லிக்கு கொண்டு வரப்படும் நீரில், 20 சதவீதம் வீணாக போய் விடுகிறது. எனவே, அதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஹரியானாவிலிருந்து தண்ணீர் வரும் பாதையில் முக்கியமாக இருப்பது முனக் கால்வாய். அங்கிருந்து தான், டில்லிக்கு, 60 சதவீத தண்ணீர் வருகிறது. எனவே, அண்டை மாநிலங்களுடன் பேசி, கூடுதல் தண்ணீரை தரக் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link