துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது.
பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 790 புள்ளிகளுடன் ‘நம்பர்-1’ இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.
தென் ஆப்ரிக்காவின் லாரா (782), ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (749) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (652) ஒரு இடம் முன்னேறி, 7வது இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் ஜெமிமா 12 (635), தீப்தி 28 (559), பிரதிகா 30 (554), ரிச்சா 32 வது (544) இடங்களில் நீடிக்கின்றனர்.
பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி, 614 புள்ளியுடன் 10 வது இடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவின் அலானா கிங் (775) முதலிடத்தில் உள்ளார்.
‘ஆல் ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் தீப்தி (342) 6வது இடத்தில் தொடர்கிறார்.
‘டி-20’ பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (770), 2வது இடத்தில் உள்ளார். பெத் மூனே (787, ஆஸி.,) ‘நம்பர்-1’ வீராங்கனையாக உள்ளார்.
இந்தியாவின் ஷைபாலி 6 (725), ஜெமிமா 11 வது (644) இடம் பெற்றனர்.
