புதுடில்லி: யுஏஇ அதிபர் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அங்கு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது சகோதரர் யுஏஇ அதிபர் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் பேசினேன். அவருக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தேன். மேற்காசியாவில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து விவாதித்தோம்.
யுஏஇயில் நடத்தப்பட்ட அனைத்து தாக்குதல், அதனால் அப்பாவி மக்களுக்கு பாதிப்பு மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதற்கு இந்தியாவின் கண்டனத்தை உறுதி செய்தேன்.
ஹார்முஸ் ஜலசந்தி வாயிலாக பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் கப்பல் போக்குவரத்து நடைபெறுவது முக்கியம் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டோம். இந்த பிராந்தியத்தில் விரைவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை விரைவில் ஏற்பட இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
