ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு மாற்றுப் பாதைகளை அறிவித்தது ஈரான்

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியின் பிரதானப் கப்பல் வழித்தடத்தில் கடல் கண்ணிவெடிகள் இருக்கும் ஆபத்தைக் காரணம் காட்டி, ஹார்முஸ் வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு மாற்றுப் பாதைகளை ஈரான் ராணுவம் அறிவித்தது.

கடல் கண்ணிவெடிகளின் அபாயம் காரணமாக கப்பல்கள் பிரதான வழித்தடத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கினை வகிக்கும் மிக முக்கிய நீர்வழிப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி, ஈரான் மீதான போர் காரணமாக மார்ச் தொடக்கத்திலிருந்து மூடப்பட்டது.

நேற்று முடிவான இரண்டு வார கால போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், கண்ணிவெடிகள் பொருத்தப்பட்டதால், பிரதான வழித்தடம் இயல்பான போக்குவரத்துக்கு அபாயகரமானதாக உள்ளது.

Source link