ஹிந்தி படித்தோர் கஞ்சா கடத்தலில் ஈடுபடுகின்றனர்: செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சென்னையில் அளித்த பேட்டி:

தி.மு.க., தலைமையிடம் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக விரைவில் பேச்சு நடத்த உள்ளோம். எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் என்பது, காங்., தலைமை விருப்பப்படி நடக்கும். எங்கள் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை.

இதற்கு முன், எவ்வளவோ வழக்குகள் மத்திய அரசு ஏஜன்சிகள் வாயிலாக போடப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான ஆதாரங்களைக் கொண்டு குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

அதேபோல், இப்போது தி.மு.க., அமைச்சர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளையும், அந்தந்த அமைச்சர்கள் எதிர்கொள்வர்.

காங்கிரசில் இருப்போர், இனிமேல் கூட்டணி குறித்து முரண்பாடான கருத்துகளை பேச மாட்டார்கள். ஹிந்தி படித்தவர்கள், பானி பூரி விற்றுக் கொண்டும், கஞ்சா கடத்திக் கொண்டும் இருப்பதாக தி.மு.க., – எம்.பி., கனிமொழி சோமு கூறியிருப்பது சரிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link