ஹிராபாய் டாடா டிரஸ்டிலிருந்து விலகினார் வேணு ஸ்ரீனிவாசன்

மும்பை: டாடா டிரஸ்ட் அறங்காவலர்களுள் ஒருவரான வேணு ஸ்ரீனிவாசன், அக்குழுமத்தின் ‘பாய் ஹிராபாய் ஜாம்ஷெட்ஜி டாடா நவ்சாரி அறக்கட்டளை’யில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

சொந்த தொழில் காரணங்களை அவர் ராஜினாமாவில் குறிப்பிட்டுள்ள நிலையில், டாடா அறக்கட்டளைகளின் முன்னாள் அறங்காவலரான மெஹ்லி மிஸ்திரி, மஹாராஷ்டிரா தொண்டு நிறுவன ஆணையரிடம் கொடுத்த புகாரை அடுத்தே வேணு ஸ்ரீனிவாசன் பதவி விலகியதாக தெரிகிறது.

‘அறக்கட்டளை விதிகளின்படி அதில் இருப்பவர்கள் பார்சிகளின் ஜொராஸ்ட்ரிய நம்பிக்கையை பின்பற்றுபவராக இருக்க வேண்டும்; மும்பையில் வசிக்க வேண்டும் என்ற இரு நிபந்தனைகளையும் வேணு ஸ்ரீனிவாசன், விஜய் சிங் ஆகிய இரு இயக்குநர்களும் பின்பற்றவில்லை’ என மிஸ்திரி தனது புகாரில் கூறியிருந்தார்.

Source link