ஹெல்த் இன்சூரன்ஸ் ' க்ளைய்ம் ' தடையற்ற காலம் குறைப்பு

ம ருத்துவக் காப்பீட்டுத் துறையில், பாலிசிதாரர்களுக்குச் சாதகமான அதிரடி மாற்றத்தை ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,’ அமல்படுத்திஉள்ளது.

இதன்படி, ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான ‘மொரட்டோரியம்’ எனப்படும் தடையற்ற காலம், 8 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:

 ஒரு நபர் தொடர்ந்து 5 ஆண்டுகள் மருத்துவக் காப்பீட்டைப் புதுப்பித்து வந்தால், அதற்குப் பின், அவரது க்ௌய்ம்களை எக்காரணம் கொண்டும் காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிக்க முடியாது

 பாலிசி எடுக்கும்போது ஏதேனும் தவறுதலாகத் தகவல் அளித்திருந்தாலோ, அல்லது, சில தகவல்களை மறைத்திருந்தாலோ கூட, 5 ஆண்டுகளுக்குப் பின், அதைக் காரணம் காட்டி ‘க்ௌய்ம்’ மறுக்கப்படாது. இருப்பினும், திட்டமிட்டு செய்யப்படும் மோசடிகளுக்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது

 ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு பாலிசியை மாற்றினாலும், காப்பீடு விடுபடாமல் இருந்தால், இந்த 5 ஆண்டு கணக்கு தொடரும்

 நீண்ட காலமாகக் காப்பீடு வைத்திருப்பவர்கள் மற்றும் முதியவர்கள், ‘க்ௌய்ம்’ கிடைக்குமா என்ற அச்சமின்றி இனி மருத்துவச் சிகிச்சைப் பெறலாம்.

Source link