ஹைதராபாத்: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள சொத்துக்கு

ஹைதராபாத்: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள சொத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், யூசூப்குடா பகுதிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா ஹில்ஸ் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஒரு பங்களா உள்ளது. கடந்த 2017 முதல் இதற்கான சொத்து வரி கட்டாமல் 82.91 லட்சம் ரூபாய் நிலுவை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

‘ஒரே முறை தீர்வு’ என்ற திட்டத்தின் கீழ் வட்டித் தொகையில் 90 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு, நேற்றுடன் செலுத்த வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டது. சொத்துக்கு தொடர்புடைய நபர்களுக்கு இதற்கான நோட்டீஸ் கடந்த பிப்ரவரியில் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இறுதி எச்சரிக்கையாக, ‘ரெட் நோட்டீஸ்’ சமீபத்தில் அனுப்பப்பட்டது.

எதற்கும் பதில் அளிக்காததால், ஹைதராபாத் மாநகராட்சி ஊழியர்கள் அந்த பங்களாவை பூட்டி சீல் வைத்தனர். நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியை முழுதாக செலுத்தி முடிக்கும் வரை, அந்த பங்களா மாநகராட்சி வசமே இருக்கும் என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Source link